கோவாவில் 25 பேர் உயிரை குடித்த இரவு விடுதி தீ விபத்து சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு கோவாவில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் எனப்படும் இரவு விடுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள், விடுதி பணியாளர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விடுதியின் சகோதரர்களான செளரப் லூத்ரா மற்றும் கெளரவ் லூத்ரா ஆகியோர் தலைமறைவாகினர்.
எனவே, அவர்களுக்கு எதிராக இண்டர்போல் ப்ளூ கார்னர், நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கோவா காவல்துறை தெரிவித்தது.
இத்தகைய சூழலில், தலைமறைவாகி இருந்த லூத்ரா சகோதரர்கள் இருவரும் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
















