இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுக்குள் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாக அமேசான் அறிவித்துள்ளது இவை, இந்தியாவின் AI துறை மற்றும் டிஜிட்டல் பொருளாதாவளர்ச்சிக்குப் பெரும்ம் உந்துதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஅதுபற்றியய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள்வைத்தபோதிலும், உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், e-commerce, cloud computing,Digital streaming, AI எனப் துறைகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.
“Everything Store” என்ற அடையாளத்துடன் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வரும் அமேசான் நேரடியாகப் பொருட்களை விற்பனை செய்வதோடு, மற்ற விற்பனையாளர்களையும் தங்கள் தளத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கிறது. அமேசான் மூலம் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறும் விற்பனையாளர்கள் உலகம் முழுவதும் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்திய உற்பத்தியாளர்கள் உலக சந்தையில் நுழைவதற்கான கருவியாக அமேசான் உள்ளது. சுமார் 1.2 கோடிக்கும் மேற்பட்ட இந்திய சிறு வணிகங்கள் அமேசான் மூலம் டிஜிட்டல் மயமாகி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்துஅமேசான் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.கடந்த ஆண்டு மட்டும் சுமார் 3 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அமேசான் உருவாக்கியுள்ளது. அமேசான் ஏற்கனவே இந்தியாவில் 11 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் அமேசான் நீண்டகால முதலீடுகளை செய்யும் என்று உறுதியளித்திருந்தார்.
அமேசானின் மூத்த துணைத் தலைவர் அமித் அகர்வால், டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் அமேசானும் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும், MADE IN INDIA பொருட்களை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்வதில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்காக, 2030க்குள் 35 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால், ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், 15 மில்லியன் சிறு வணிகங்களுக்கு AI தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்கும் என்றும், நாட்டின் இ-காமர்ஸ் ஏற்றுமதி சுமார் 80 பில்லியன் டாலராக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் சிறு தொழில்கள் மற்றும் மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களையும் அமேசான் செயல்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். இந்த முதலீட்டு செயல்திட்டத்தில், AI பாடத்திட்டங்கள், செயல்முறை திட்டங்கள், ஆசிரியர் பயிற்சிகள், தொழில் நுட்பங்கள் என பள்ளி மாணவர்களுக்கான AI கற்றல் முயற்சிகளையும் அமேசான் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
ஃப்ளிப்கார்ட், பிளிங்கிட், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் மற்றும் ஜெப்டோ போன்ற மற்ற நிறுவனங்களுடனான வணிகப் போட்டி அதிகரித்து வரும் நிலையில், தனது வணிக செயல்பாடுகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வளங்களை விரிவாக்க சுமார் 233 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தையும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
















