இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் நேரடி உடந்தை அம்பலமாகியுள்ளது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரும், சர்வதேச பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத், பாகிஸ்தானின் லாகூரில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் வழக்கமான இந்தப் பொதுக்கூட்டத்தில் வித்தியாசமாக நடந்தது என்னவென்றால், அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானின் தலைமை தளபதி அசிம் முனிர் பங்கேற்றது தான்.
பயங்கரவாதிகளின் கூடாரத்தில் அசிம் முனிர் நேரடியாகத் தஞ்சமடைந்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை மெளனமாகக் கவனித்து வருகிறார்.
கூட்டத்தின்போது, பேச்சாளர்கள் கங்கை மற்றும் யமுனை நதிகளை ரத்தத்தால் நிரப்புவோம் என்றும், டெல்லியை உலுக்குவோம் என்றும் வெளிப்படையான அச்சுறுத்தல்களை விடுத்தனர்.
ஆனால், ஒரு அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அசிம் முனிர், அந்தக் கூட்டத்தில் அதனை ரசித்துக் கொண்டிருந்தார்.
இது பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் பாகிஸ்தான் ராணுவத்தின் நேரடி ஆதரவை குறிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
















