கோவா இரவு விடுதியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாகத் தாய்லாந்தில் கைதான லூத்ரா சகோதரர்கள், கைவிலங்குடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள பாகா கடற்கரை பகுதியில் உள்ள இரவு விடுதியில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தீ விபத்து வழக்கில் இரவு விடுதி உரிமையாளர்களான சௌரப் மற்றும் கௌரவ் லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்துக்கு தப்பியோடிய நிலையில், விடுதி உரிமையாளர்களின் கூட்டாளியான அஜய் குப்தா என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியால், தாய்லாந்தில் தலைமறைவாக உள்ள லூத்ரா சகோதரர்களை அந்நாட்டு போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் தலைமறைவாக இருந்த லூத்ரா சகோதரர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், நாடு திரும்புவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, லூத்ரா சகோதரர்களை, அந்நாட்டு போலீசார் கைது செய்து, அவர்களின் கைகளில் விலங்கிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
















