மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக எம்.பி சந்தித்தது தொடர்பாக வெளியான வீடியோ போலியானது எனப் பிரஸ் இந்தியா பீரோவின் தகவல் சரிபார்ப்பு குழு உறுதி செய்துள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக எம்.பி அருண் நேரு டெல்லியில் சந்தித்து பேசினார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், AI மூலம் சித்தரிக்கப்பட்ட மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலானது.
அதில், நிதியமைச்சரின் பாதத்தில் திமுக எம்.பி விழுந்து வணங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், சம்மந்தப்பட்ட வீடியோ போலியானது எனப் பிரஸ் இந்தியா பீரோவின் தகவல் சரிபார்ப்பு குழு உறுதி செய்துள்ளது.
















