சபரிமலை புல்மேடு பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக ஐயப்ப பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சபரிமலை செல்வதற்கு சாலக்கயம் – பம்பை, எருமேலி – பம்பை, சத்திரம் – புல்மேடு – சன்னிதானம் என மூன்று பாதைகளைப் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கார்த்திகை மாத மகரஜோதி தரிசனத்தையொட்டி சபரிமலைக்கு புல்மேடு வழியாகச் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
அப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் உரக்குழி அருவி பகுதிக்குச் செல்வதை தவிர்க்கும்படி வனத்துறை எச்சரித்துள்ளது.
















