மக்களவை வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் புகைப்பதாக, பாஜ எம்பி அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடந்து வருகிறது.
இந்நிலையில் விவாத நேரத்தின் போது பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்கூர், மக்களவை வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட இ சிகரெட்டை திரிணமுல் காங்கிரஸ் எம்பி பயன்படுத்துவது நாடாளுன்ற ஒழுக்கத்தையும், தேசிய சட்டத்தையும் மீறுவதாகும் எனக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
















