ஒரு நேர்மையான நீதிபதிக்கு எதிராகத் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் மனு அளித்திருப்பது துரதிருஷ்டவசமானது எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகச் சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தியபின் அவர் அளித்த பேட்டியில்
ஒரு நேர்மையான நீதிபதிக்கு எதிராகத் திமுக மனு அளித்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றும் நீதித்துறைக்கும், நிர்வாகத் துறைக்கும் மோதல் ஏற்பட்டால் பல்வேறு பிரச்னைகள் உருவாகும் என அவர் குறிப்பிட்டார்.
திமுக தங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால் ஒன்று பேசுகிறார்கள், இல்லையென்றால் வேறு விதமாகப் பேசுகிறார்கள் என்று விமர்சித்தவர், நீதிமன்றத்திற்கும், நிர்வாகத்திற்கும் ஏற்படும் மோதல் போக்கைத் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதியைத் தகுதிநீக்கம் செய்ய எம்.பி.க்கள் மனு அளித்திருப்பது தவறான முன்னுதாரணம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
















