உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சால், நேருவின் முழுக் குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தம்குறித்த நேற்றைய விவாதத்தின் போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் – மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தனது குற்றச்சாட்டுகளுக்கு அமித்ஷாவிடம் எந்தப் பதிலும் இல்லை எனச் செய்தியாளர்களிடம் ராகுல் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசியுள்ள கிரிராஜ் சிங், உண்மையை கேட்க ராகுலுக்கு வலிமை இல்லை எனவும், இந்தப் பழக்கத்தை ராகுல் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
















