திமுகவைச் சேர்ந்த 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், அதில் எத்தனை பேர் சிறைக்கு செல்வார்கள் எனத் தெரியாது எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியவர்,
திமுகவைச் சேர்ந்த 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் 17 பேரில் எத்தனை பேர் சிறைக்கு செல்வார்கள் எனத் தெரியாது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நடக்கும் அனைத்து குற்றச்செயல்களிலும் திமுகவினரே ஈடுபடுகின்றனர் என்றும் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சென்னை சிங்கார சென்னையாக இருந்தது என்றும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சீரழிந்த சென்னையாக மாறிவிட்டது என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
















