முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை ஒட்டி நெல்லையில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் அவசர, அவசரமாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தையும், நெல்லை அரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதற்காக வரும் 20ம் தேதி அவர் நெல்லை செல்லவுள்ளார். இதையொட்டி, அரசு மருத்துவமனை முன்பு குண்டும், குழியுமாக உள்ள சாலைகள், அவசர, அவசரமாகச் சீரமைக்கப்பட்டு வருகிறது.
சாலையை சீரமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகம், முதல்வரின் வருகையை ஒட்டி அவசர அவசரமாகச் சீரமைத்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
















