ராணிப்பேட்டை அடுத்த விநாயகபுரம் கிராமத்தில் 20 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
தலங்கை ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
சாலை விரிவாக்கப் பணியின்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், விநாயகபுரம் கிராம மக்களுக்கு 20 நாட்களாகக் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் அவதியடைந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















