தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சரியாகப் படிக்காத 7 வயது சிறுவனுக்கு டியூசன் ஆசிரியர் 8 இடங்களில் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தின் பிலிம்நகரை சேர்ந்த தேஜ் நந்தன் என்ற மாணவர் டியூசனுக்கு செல்லும் நிலையில் அவர் சரியாகப் படிக்காததால் டியூசன் ஆசிரியர் கடுமையாகத் தாக்கி உள்ளார்.
மேலும், சிறுவனின் உடலில் 8 இடங்களில் சூடும் வைத்துள்ளார். சூட்டு காயங்களால் சிறுவன் அவதியடைந்த நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் மனாஸை போலீசார் தேடி வருகின்றனர்.
















