வங்கதேசத்தில் 11 மாதங்களில் 83 லாக்கப் மரணங்கள் - ஷேக் ஹசீனா அரசை விட மோசம்!
Sep 12, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வங்கதேசத்தில் 11 மாதங்களில் 83 லாக்கப் மரணங்கள் – ஷேக் ஹசீனா அரசை விட மோசம்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 12 மாதங்களாக வங்கதேசம் முழுவதும் லாக்கப் மரணங்கள், படுகொலைகள் எனக் கடுமையான மனித உரிமை மீறல்களும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் அதிகார துஷ்பிரயோகங்களும் எல்லை மீறி நடக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் மூலம், முன்னாள் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா படிப்படியாக ஒரு சர்வாதிகாரியாகவே மாறியிருந்தார். 15 ஆண்டுகளுக்கும் மேல் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான போராட்டம், தீவிரமடைந்ததை அடுத்து, வேறு வழி இல்லாமல் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, பிரதமர் பதவியை விட்டு விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதும் நாட்டில் அமைதியும் மனித உரிமைக்குப் பாதுகாப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த எந்தச் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 256-க்கும் அதிகமான கலவரங்களும் வன்முறைகளும் நடந்துள்ளன. இதில் சுமார் 140க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் 231 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது முந்தைய இரண்டு ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை விட மிக அதிகம் என்று மனித உரிமைகள் ஆதரவு சங்கத்தின் HRSS அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த வன்முறைகளால் இந்துக்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. மேலும் துர்கா பூஜை, இந்து கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் இந்து பெண்களின் விளையாட்டு நிகழ்வுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இஸ்லாமிய மத அமைப்புகள் தங்கள் அரசியல் நலன்களுக்காக வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளன.

இந்நிலையில், கடந்த 11 மாதங்களில் சட்டத்துக்குப் புறம்பாக 29 காவல்துறை மரணங்கள் நடந்துள்ளதாக Ain o Salish Kendra (ASK) ஏஎஸ்கே அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இதே காலகட்டத்தில் 28 தண்டனைக் கைதிகளும், 55 விசாரணைக் கைதிகளும் சிறையில் மர்மமான முறையில் இறந்துள்ளனர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் 90 கைதிகள் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகச் சிறைத்துறை இயக்குநரகத்தின் உதவி ஆய்வாளர் ஜெனரல் ஜன்னத்-உல் ஃபர்ஹாத், கூறியுள்ள்ளார். ​​

காவல்துறை தலைமையகத்தின் உதவி ஆய்வாளர் சஹாதத் ஹொசைன், தற்கொலைகள் மற்றும் கலவரத்தால் இறந்தவர்களை மனித உரிமை அமைப்புகள் லாக்கப் மரணங்களாகக் காட்டுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, 2024 ஆகஸ்ட் முதல் 2025 ஜூலை வரை முகமது யூனுஸின் இடைக்கால அரசில் பத்திரிகையாளர்கள் மீது 878 தாக்குதல்கள் நடந்துள்ளன.

முந்தைய ஆண்டை விட இது சுமார் 230 சதவீதம் அதிகம் என்று உரிமைகள் மற்றும் அபாயங்கள் பகுப்பாய்வுக் குழு (RRAG) தெரிவித்துள்ளது. அனைத்து சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் லாக்கப் மரணங்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும், காவல்துறையினர் சட்டத்தின் படி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags: Bangaladeshமுகமது யூனுஸ்ஷேக் ஹசீனா83 lockdown deaths in Bangladesh in 11 months - worse than Sheikh Hasina's government
Share
Tweet
SendShare
Previous Post

தெலங்கானா : 7 வயது சிறுவனுக்கு 8 இடங்களில் சூடு வைத்த டியூசன் ஆசிரியர்!

Next Post

ட்ரம்புக்கு அமெரிக்க MP எச்சரிக்கை : இந்தியாவை பகைத்தால் நோபல் பரிசு “NO”!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies