ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் வரலாறு படைக்கும் என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே வரும் 18ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகள்குறித்து கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோட்டில் தவெக பரப்புரை கூட்டத்திற்கு தடை ஏதும் இல்லை எனவும் இந்தப் பொதுக்கூட்டம் வரலாறு படைக்கும் எனவும் தெரிவித்தார்.
தவெகவின் தலைமையை ஏற்று கொள்ள இருக்கும் கட்சிகளைக் கூட்டணியில் இணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம் எனச் செங்கோட்டையன் கூறினார்.
















