திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கத்தில் முன்னணி மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் பேசிய அவர், பள்ளி அருகிலேயே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக தெரிவித்தார்.
பணக்காரர்களுக்கு உயர்ரக போதைப்பொருள், கிராமங்களில் கஞ்சா; இதுதான் திமுகவின் சாதனை என்றும் அவர் கூறினார்.
அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை முதலமைச்சர் கண்டு கொள்ளவில்லை என்றும், 12 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் திமுக அரசு மீது அவர் குற்றம்சாட்டினார்.
















