கையாலாகாத திமுக அரசு, விரைவில் தூக்கி எறியப்படும் - அண்ணாமலை
Mar 15, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கையாலாகாத திமுக அரசு, விரைவில் தூக்கி எறியப்படும் – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்டுப்பாடற்ற மது மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையால் ஏற்படும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுவது, அப்பாவி பொதுமக்களே என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு மாறி இருப்பது, பாராளுமன்றத்தில், மத்திய சாலைப் போகுவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி  அளித்துள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2021 – 2024 நான்கு ஆண்டுகளில், 2,54,526 சாலை விபத்துகள் தமிழகத்தில் பதிவாகியிருக்கின்றன. நாட்டின் மற்ற எந்த மாநிலங்களிலும், இத்தனை விபத்துகள் ஏற்படவில்லை. தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாலை விபத்துக்களால், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 50 பேர் உயிரிழக்கின்றனர்.

தரமற்ற, சீர்குலைந்த சாலைகள் ஒரு காரணமாக இருந்தாலும், தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க, தெருவுக்குத் தெரு டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறந்து வைத்துள்ள திமுக அரசின் அலட்சியப்போக்கே இதற்கு முக்கியக் காரணம். கட்டுப்பாடற்ற மது மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையால் ஏற்படும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுவது, அப்பாவி பொதுமக்களே என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், திமுக அரசுக்கு மது விற்பனை மூலம் கிடைக்கும் பணமே முக்கியமாகத் தெரிகிறது. போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கவோ, சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்தவோ, பொதுமக்களின் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்யவோ இயலாத இந்த கையாலாகாத திமுக அரசு, விரைவில் தூக்கி எறியப்படும் என்று  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK StalinTN GOVT NEWSThe incompetent DMK government will be toppled soon - Annamalai
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் : விஷ்வ ஹிந்து பரிஷத்

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies