பெங்களூருவில் ஆசை ஆசையாக வளர்த்த கிளியால் இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
32 வயது தொழிலதிபரான அருண் குமார் என்பவர், சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மக்கா கிளியை ஆசை ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.
அந்தக் கிளி வீட்டிலிருந்து பறந்து அருகே இருந்த மின்கம்பத்தில் சென்று அமர்ந்தது. அதனைப் பிடிப்பதற்காக அருண் குமார் முயற்சி செய்துள்ளார்.
அதற்காக இரும்பு குழாயைப் பயன்படுத்தி பறவையை காப்பாற்ற முயன்றபோது உயர் மின்னழுத்தக் கம்பியில் பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
செல்லமாக வளர்த்த கிளியால் இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
















