கொல்கத்தாவில் ரசிகர்கள் வன்முறை சம்பவம்குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நிரம்பியிருந்த ரசிகர்களை மெஸ்ஸியை பார்ப்பார் எனச் சொல்லப்பட்ட நிலையில், மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகத்துடன் குழுமியிருந்தனர்.
ஆனால் அவர் பாதியிலேயே வெளியேறியதால் மைதானத்தில் இருந்த பொருட்களை எல்லாம் ரசிகர்கள் சூறையாடினர்.
இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மெஸ்ஸியிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நிகழ்ச்சி ஏற்பாட்டில் நிர்வாகக் குறைப்பாடு இருந்தது அதிர்ச்சி அளிப்பதாகவும், இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பதாகவும் அறிவித்துள்ளார்.
















