மதுரை மாவட்டத்தில் அதிக குழந்தைத் திருமணங்கள் நடைபெற்ற கிராம ஊராட்சியாகக் கண்டறியப்பட்ட சாப்டூர் ஊராட்சியில், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆய்வு செய்தார்.
உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சாப்டூரில் அதிக குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டது.
இதனால் அங்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பெண் குழந்தைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
















