ஆஸ்திரியா பள்ளிகளில் மாணவியர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் 14 வயதுக்குட்பட்ட முஸ்லிம் சிறுமியர் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் மசோதாவை, அந்நாட்டின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இது அடுத்தாண்டு செப்டம்பரில் தொடங்கும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது. விதிகளை மீறினால், மாணவியரின் பெற்றோருக்கு, இந்திய மதிப்பில் 85 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
பெண்கள் தங்கள் உடலை மறைக்க வேண்டும் எனக் கூறுவது மத சடங்கு அல்ல; அடக்குமுறை என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
















