விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காவல் சார்பு ஆய்வாளர் மனைவி இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாத்தூர் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக அருண் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளவரசி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் காவலர் அருண், தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி சண்டையிட்டதாகவும், இளவரசியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிடாததால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
















