சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டிரம்ப், எங்கள் மீதும், சிரியா மீதும் ஐஎஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.
இதற்குத் தக்க பதிலடி தருவோம் என்றும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
















