துருக்கியின் தானிய களஞ்சியத்தை விழுங்கும் ராட்சத புதைகுழிகளால் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அனடோலியாவில் அமைந்துள்ள கோன்யா சமவெளி அந்நாட்டின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு தான் கோதுமை, சோளம் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற முக்கியப் பயிர்கள் அதிகளவில் விளைகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தச் செழிப்பான நிலம் மர்மமான முறையில் பாதாளத்திற்குள் மறைந்து வருகிறது.
இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட ராட்சத மண்குழிகள் திடீரென தோன்றி, விவசாய நிலங்களை விழுங்கி வருகின்றன.
இந்தக் குழிகள் சில சமயங்களில் 100 அடிக்கும் மேல் அகலமாகவும், 160 அடிக்கும் மேல் ஆழமாகவும் இருப்பதுடன், வயல்களையும், சாலைகளையும் அச்சுறுத்துகின்றன.
இந்தப் புதைகுழிகள் வேகமாகப் பெருகுவதற்கு முக்கியக் காரணம், மனிதர்களால் தூண்டப்பட்ட நிலத்தடி நீர் பற்றாக்குறைதான். அபாயம் காரணமாகப் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டுச் செல்லும் நிர்பந்தத்தில் உள்ளனர்.
















