திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் கடந்த 3ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து ஒவ்வொரு நாளும் கொப்பரையில் நெய் நிரப்பி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு வந்தது.
அந்த வகையில் 11ஆவது நாளான நேற்றுடன் மகா தீப தரிசனம் நிறைவு பெற்றது. நிறைவு நாளில் விண்ணை பிளக்க நகரி வாத்தியங்கள் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து இன்று மலையில் உள்ள தீபக் கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் கொப்பரையில் இருந்து நெய் சேகரிக்கப்பட்டு அதனுடன் பல்வேறு வாசனை திரவியங்கள் சேர்த்து தீப மை தயார் செய்யப்பட்டு ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு நெற்றியில் திலகமிட்டு பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
















