நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத் துறையின் அதிகாரம் தவறானது என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த எம்.எல்.ஏ விரேந்திரா, தனது சொத்துகளை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக முடக்கி விட்டதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின்றி சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத் துறையின் அதிகாரம் தவறானது எனக் கருத்து தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, மனு மீது மத்திய அரசு, அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
















