தலைநகர் டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நான்காம் நிலை தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதியற்ற வாகனங்களை எல்லைகளிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 450-ஐ தாண்டியதைத் தொடர்ந்து, மாசுபாடு மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகபட்ச அவசரகால கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே மூன்றாம் தடை நிலை வரை அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நான்காம் நிலை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவை போக மற்ற லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் எல்லைப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன.
















