ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில், வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழே சென்றுள்ளதால் அங்கு நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் உறைந்து காணப்படுகின்றன.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல முக்கியப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சரிந்துள்ளதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக, தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் குளிர் அலை மிகத் தீவிரமாக உள்ளது.
கிராமங்களில் ஓடும் ஆறுகள், குளங்கள் மற்றும் குடிநீர் குழாய்களில் நீர் உறைந்துள்ளதால், மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வரும் நாட்களிலும் குளிர் அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















