திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் அங்குப் பரபரப்பான சூழல் நிலவியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 3ம் தேதி நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.
இத்தகைய சூழலில், மலையின் நடுவில் மர்ம நபர்கள் சிலர் தீயை பற்றவைத்துச் சென்றுள்ளனர்.
இதனால் கோயிலுக்குப் பின் பகுதியில் அமைந்துள்ள பிரமாண்டமான மலை புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது.
எனவே, மலையில் தீ வைத்த நபர்களை கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்களும், கோயில் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















