மேட்டுப்பாளையம் நகராட்சி ஊழலில் திளைப்பதாகக் குற்றம்சாட்டி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் மக்களின் அடிப்படை வசதிகளை சரிவரப் பூர்த்தி செய்யாமல், ஊழலில் திளைப்பதாகக் குற்றம்சாட்டி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர பாஜக தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கண்டன உரையாற்றினர்.
திராவிட மாடல் தோல்வியடைந்த மாடல், ஓய்ந்துபோன மாடல், ஓடிப்போகும் மாடல் எனப் பாடல் பாடி நகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
















