கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில், திமுக நிர்வாகிகள் 75க்கும் மேற்பட்டோர் கூண்டோடு ராஜினாமா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விளாங்குறிச்சி திமுக வட்ட செயலாளர் மயில்சாமி, பல ஆண்டுகளாக அக்கட்சியில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காகத் திமுகவில் இருந்து விலகுவதாகக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மயில்சாமி, கடிதம் அனுப்பினர்.
இதேபோல் அவரின் ஆதரவாளர்களும், திமுக நிர்வாகிகளுமான 75க்கும் மேற்பட்டோர் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
விளாங்குறிச்சியில் திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ததால், கட்சியின் தலைமையகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
















