விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 3 மணி நேரமாகச் சென்னை செல்லப் போதிய அரசுப் பேருந்துகள் இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள் அடுத்தடுத்து இரு முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளின் முறையான திட்டமிடல் இல்லாமல் திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு அரசுப் பேருந்துகளை இயக்கியதாகப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
















