வரும் 17-ம் தேதி கோவாவில் நடைபெறும் நிகழ்வில், ஐஎன்எஸ் ஹன்சா கப்பலில் MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களின் 2-வது படைப்பிரிவு இணைக்கப்படும் எனக் கடற்படை அறிவித்துள்ளது.
இந்திய கடற்பரப்பில் கண்காணிப்பை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த 2020-ல் அமெரிக்காவிடம் இருந்து 8,000 கோடி ரூபாய் மதிப்பில் சீஹாக் ஹெலிகாப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
அதன்படி அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களின் முதல் தொகுப்பு, கடந்த 1 வருடத்துக்கு முன்னர் கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடாவில் புதிதாகச் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களின் 2-வது படைப்பிரிவு, வரும் 17-ம் தேதி கோவாவில் ஐஎன்எஸ் ஹன்சா கப்பலில் இணைக்கப்படும் எனக் கடற்படை தெரிவித்துள்ளது.
தலைமை விருந்தினராகக் கலந்து கொள்ளும் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி முன்னிலையில் அவை இணைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
















