சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழ பாஜக தேர்தல் பொறுப்பாளராகப் பியூஷ் கோயலை நியமித்துக் கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள், தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலையும், இணைப் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோரையும் நியமித்துக் கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 3 மத்திய அமைச்சர்களையும் பாஜக களமிறக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
















