2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களின் விநியோகம், சென்னை பனையூரில் உள்ள அன்புமணியின் அலுவலகத்தில் தொடங்கியது.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாமக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம், பனையூரில் உள்ள அன்புமணியின் அலுவலகத்தில் தொடங்கியது.
விருப்ப மனுக்களுக்கான கட்டணத்தைப் பொறுத்த வரை, பொதுத் தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாயாகவும், தனித் தொகுதிக்கு 5 ஆயிரம் ரூபாயாகவும், பெண்களுக்கு மட்டும் 5 ஆயிரம் ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 20-ம் தேதி மாலை 6 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருப்ப மனுவை பெற்றுக் கொண்ட பாமகவினர் சிலர், அவற்றை பூர்த்தி செய்து பாமக தலைவர் அன்புமணியிடம் வழங்கினர்.
















