விமான போக்குவரத்தில் இடைநிறுத்தச் சம்பவங்கள் அதிகரிப்பதால் விமானிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
விமானங்கள் சரியான பாதையில் பயணிக்கவும், சரியான இடங்களில் தரையிறங்கவும் ஜிபிஎஸ் உதவி அவசியமானதாக உள்ளது.
ஆனால் போர் பகுதிகள், சைபர் தாக்குதல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த ஜிபிஎஸ் சிக்னல்கள் இடைமறிக்கப்படுகின்றன அல்லது குறுக்கீடுகள் நிகழ்கின்றன.
இதன் காரணமாக, ஜிபிஎஸ் செயலிழப்பு அல்லது தவறான வழிகாட்டல்கள் விமான விபத்திற்கு வழிவகுக்கும்.
இதுபோன்ற ஜிபிஎஸ் குறுக்கீடுகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாகச் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
















