அரசுமுறைப் பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னரைச் சந்தித்து இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இரண்டு நாள் பயணமாக ஜோர்டான் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டின் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனைச் சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, தனது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்று கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக ஜோர்டான் தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
காசா பிரச்னையில் ஜோர்டான் ஆரம்பத்திலிருந்தே பங்களிப்பை வழங்கி வருவதாகக் கூறிய அவர், அங்கு அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிராக ஜோர்டான் நாடு, மனிதகுலத்திற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பி உள்ளதாகவும் பிரதமர் மோடி பேசினார்.
















