பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை என்பதற்கு சா்வதேச அமைப்புகள் அளிக்கும் அங்கீகாரமே சாட்சி - நிர்மலா சீதாராமன்
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை என்பதற்கு சா்வதேச அமைப்புகள் அளிக்கும் அங்கீகாரமே சாட்சி – நிர்மலா சீதாராமன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 16, 2025, 07:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை என்பதற்கு சா்வதேச அமைப்புகள் அளிக்கும் அங்கீகாரமே சாட்சி என  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாக கடந்த ஜூலையில் அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்ததற்கு மக்களவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எதிா்க்கட்சிகள் விளக்கம் கோரினா். இதற்கு பதிலளித்துப் பேசிய நிா்மலா சீதாராமன், இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சியை ஒவ்வொரு சா்வதேச அமைப்பும் அங்கீகரிப்பதாக குறிப்பிட்டார்.

சா்வதேச நிதியம், எஸ் அண்ட் பி போன்ற அமைப்புகள் நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து வலுவடையும் என கணித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். நிகழ் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த நிதியாண்டில் பொருளாதாரம் 7.3 சதவீதம் வளா்ச்சியடையும் என ரிசா்வ் வங்கி கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடன்-ஜிடிபி விகிதம் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு 61.4 சதவீதமாக இருந்த நிலையில், மத்திய அரசின் சிறப்பான கொள்கைகளால் 2023-24இல் 57.1 சதவீதமாக குறைந்ததாகவும், நிகழாண்டு இறுதியில் இது 56.1 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2014-15இல் பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 46,000 கோடியாக இருந்த நிலையில் 2023-24இல் ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

இதுமட்டுமின்றி மின்னணு, வாகனங்கள் என பல்வேறு துறைகளிலும் இந்தியா பெரும் வளா்ச்சியை பதிவு செய்து வருவதாகவும், இத்தனை தரவுகள் இந்திய பொருளாதாரம் வளா்ச்சியடைவதாக கூறுகையில் யாரோ ஒருவா் வீழ்ச்சியடைந்ததாக கூறியதை ஏற்கத் தேவையில்லை என்றும் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார்.

Tags: international organization acknowledgementIndian EconomyFinance Minister Nirmala SitharamanInternational Monetary FundUS President Donald Trumprecession.
Share
Tweet
SendShare
Previous Post

ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Next Post

புதிய உயர்கல்வி ஆணையம் அமைப்பதற்கான மசோதா – மக்களவையில் அறிமுகம்!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies