2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக புதிய செயல் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாக கூறினார். சட்டமன்ற தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்றும் ,தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணியில் மேலும் சி கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்றும் நயினார் நாகேந்திரன் குறிபிட்டார்.
















