சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 17ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை 25 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டு, 17ம் தேதி முதல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட வந்த நிலையில், கடந்த 8ம் தேதி மட்டும் ஒரு லட்சத்து 844 பேர் தரிசனம் செய்ததாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
மேலும் வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















