தமிழக வேளாண்துறை அமைச்சர் விஷம் பரப்பும் அமைச்சராக உள்ளார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
கடலூர் நொச்சிக்காடு கிராமத்தில் சிப்காட் விரிவாக்கம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக் குழு அமைத்து சிப்காட்டுக்கு எதிராக அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய பிரதிநிதிகளை கிராம மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நொச்சிக்காடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்று பேசினார்.
அப்போது வேளாண் துறை அமைச்சராக உள்ள எம் ஆர் கே பன்னீர்செல்வம் விஷம் பரப்பும் அமைச்சராக உள்ளார் எனவும், நெல் சேமித்து வைக்கும் கிடங்கு அமைக்க 300 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியதில் ஒரு சேமிப்பு கிடங்கு கூட தமிழக அரசு கட்டவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
திமுக அரசாங்கம் கோவிலில் கட்டிடம் கட்டுவதாக சொல்லி அறநிலையத்துறையை வைத்து கொள்ளையடிக்கும் அரசாங்கமாக உள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
















