உத்தர பிரதேசத்தில் கரும்பு தோட்டத்தை நாசம் செய்யும் குரங்குகளை விரட்ட இளைஞர் கரடி வேடம் அணிந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் வைரலாகி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் பகுதியில் கரும்பு விவசாயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரும்பு தோட்டங்களுக்குள் புகும் குரங்குக் கூட்டங்கள் கரும்பு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அதிகாரிகளிடம் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து விவசாயிகள், தங்கள் கரும்புப் பயிர்களைக் குரங்குகளின் நாசவேலையில் இருந்து பாதுகாக்க நூதன முயற்சியைக் கையாண்டு வருகின்றனர். அதன்படி கரடி வேடமிட்டு குரங்குகளை அச்சறுத்தி துரத்தி வருகின்றனர்.
கரடி வேடமிட்டுப் பயிர்களைப் பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகள் இதற்காகப் பணம் வசூலித்துக் கரடி உடையை வாங்கி இளைஞர் ஒருவரை உலாவ விட்டுள்ளனர்.
குரங்குக் கூட்டங்களை கரடி வேடமிட்ட இளைஞர் துரத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
















