சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர், தனது குழந்தைக்குச் சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை கோரி பாளையங்கோட்டை வட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார்.
எனினும் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கவில்லை என கூறி அவரின் விண்ணப்பத்தை வட்டாட்சியர் நிராகரித்தார்.
இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















