காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமிக்குத் திருமணம் நடந்த விவகாரத்தில் பெற்றோர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் 17 வயது சிறுமி திருமண கோலத்தில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.
இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அதில், சிறுமிக்குக் கட்டாய திருமணம் நடத்தப்பட்டதை அறிந்த போலீசார் மணமகன் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
















