கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய கழிவுநீரை அகற்றவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் எனப் பாஜகவினர் அறிவித்துள்ளனர்.
ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடையே நிலவும் அதிகார போட்டியால் கழிவு நீர் அகற்றப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என்றும் பாஜகவினர் அறிவித்துள்ளனர்.
















