மதுரை சோழவந்தான் அருகேயுள்ள பாலமுருகன் கோயில் கார்த்திகை மாத தேர் ரத விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சுவாமி முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையுடன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரத தேரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார்.
அப்போது பெண்கள் சிலர், முருகனின் சிறப்பு அலங்காரத்தைப் பார்த்து ஆனந்தக் கண்ணீருடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
















