கேரளாவில் பேருந்தில் நடிகர் திலீப்பின் பறக்கும் தளிகா படம் ஒளிபரப்பியதை கண்டித்து பெண் பயணி ஒருவர் சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் A1 – A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.இந்நிலையில் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே திருவனந்தபுரத்தில் இருந்து தொட்டில்பாலம் நோக்கிச் சென்ற பேருந்தில் நடிகர் திலீப்பின் பறக்கும் தளிகா படம் ஒளிபரப்பப்பட்டது.
இதை கண்டித்து பெண் பயணி ஒருவர் சண்டை போட்டது இணையத்தில் வைரலானது. இதனையடுத்து படம் பாதியில் நிறுத்தபப்பட்டது.
இதனால் படத்தை ஆர்வமுடன் ரசித்துப் பார்த்து வந்த சில ஆண் பயணிகள் ஆத்திரமடைந்து, அந்தப் பெண் பயணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது.
















