விஜய் திவாஸ் தினத்தை ஒட்டி சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
1971ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. இதில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 16ம் தேதி விஜய் திவாஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் ராணுவம், விமானப்படை, கடற்படை வீரர்கள், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும் ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் பொதுமக்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
















