அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பாஜக மாவட்ட செயலாளரை அவதூறாகப் பேசிவிட்டு தாக்க முயன்ற நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சையைச் சேர்ந்த விஜயவீரன் என்பவர் பாஜக மாவட்ட நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்றபோது அங்கு வந்த நபர் ஒருவர், விஜயவீரனைக் கட்சியின் பெயர் சொல்லி அவதூறாகப் பேசியதோடு நாற்காலியால் தாக்க முயன்றார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய நபரைத் தேடிவருகின்றனர்.
















