மார்கழி மாத பிறப்பை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன.
இதேபோல் உண்ணாமுலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது.
இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
















